சாம்ராஜ்நகர் மாவட்டம் அன்னூர் தாலுகாவில் வசித்து வருபவர் ஈஸ்வரன் என்கிற ராஜூ. இவர் வீட்டில் மான் தோல் வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் ராஜூவின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு மான் தோல் மற்றும் கால்கள் இருந்தது தெரிய வந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற வனத்துறையினர் எல்லாவற்றையும் பறிமுதல் செய்தனர். இதற்கு சம்பந்தமான மற்றும் இரண்டு பேரை கைது செய்த வனத்துறையினர் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களையும் மற்றும் நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் அவங்களுக்கு நீதிமன்றம் தகுந்த தண்டனை வழங்கியது.
வேண்டுகோள்: இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்டிப்பாக தகவல் கொடுத்து காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். மேலும்,
“வனவிலங்குகளை வேட்டையாடுவது ஒரு மனிதாபிமானம் அற்ற செயல் சட்ட விரோதமானது, இது போன்ற தவறுகளுக்கு என்றும் மன்னிப்பே கிடையாது அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்”
என்று தெரிவித்தனர்.