கடந்த ஜூலை மாதம் 10 தேதி கோலார் நகரின் புறநகரில் உள்ள ஒரு பாரில் இளைஞர் ஒருவர் கொடூரமாக முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். கொலை செய்யப்பட்டவர் கோலார் நகரைச் சேர்ந்த தானு என்று அமீர்கான் என்பது தெரிய வந்தது.
அவரது கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை நடந்த இடத்தில் காலி மதுபான பாட்டில்கள் மற்றும் பாதி சாப்பிட்ட சிப்ஸ் பாக்கெட்டுகள் ஆகியவற்றை போலீசார் கண்டெடுத்தனர். கொலைக்கு முன்பாக கொலையான நபரும் கொலையாளியும் ஒரே இடத்தில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த இருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் கொலை நடந்த இடத்தில் கிடந்த சிப்ஸ் பாக்கெட் மூணு பார்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.
அதிலும் சில பேர் மட் டுமே சிப்ஸ் வாங்கியுள்ளனர் எனவே, அன்று யாரெல்லாம் சிப்ஸ் பாக்கெட்டை வாங்கினார்கள் என்பது குறித்து சிசிடிவியில் உள்ள காட்சியில் சோதனை செய்யப்பட்டது, அந்த விசாரணையில் குற்றவாளியைப் பற்றிய துப்பு போலீசாருக்கு கிடைத்தது.
கொலையாளி அதே நகரைச் சேர்ந்த அஸ்லாம் பாஷா தான் என்றும் அவரு ஊரை விட்டு தலைமறைவானது தெரிய வந்தது. கொலைக்குப் பிறகு குற்றவாளி பெங்களூருக்கு சென்றிருப்பதை அறிந்த போலீசார் அவர் திரும்புவதற்காக காத்திருந்து ஊர் திரும்பியதும் போலீஸ் பாணியில் விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததும், கொலை செய்யப்பட்ட நபர் தன் மனைவியிடம் தவறாக நடந்து கொள்வதை அறிந்த அஸ்லாம் பாஷா ஆத்திரமடைந்து அவரை மது குடிக்க அழைத்து சென்று கத்தியால் குத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து கொலை சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தனர்.