பாலியல் குற்றங்களில் இருந்து சிறுமிகளை பாதுகாப்பதே போக்சோ சட்டத்தின் நோக்கமே தவிர அவர்களுக்கு இடையேயான சம்மத காதல் உறவை குற்றமாக பார்க்க கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது
டெல்லியில் 15 வயது சிறுமியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த 25 வயது இளைஞன் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தாய் 2022-ம் ஆண்டு புகார் தெரிவித்தார்.
மருத்துவ அறிக்கையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டதால் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் 11 மாதங்களாக சிறையில் இருக்கும் வாலிபர் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்
மனுவை விசாரித்த நீதிபதி விகாஸ் மகாஜன் கூறியதாவது: பாதிக்கப்பட்டவர் சிறுமிதான் இருப்பினும் ஒரு வாலிபர் மீதான குற்றச்சாட்டில் அரசு தரப்புக்கு ஆதரவு அளிக்கவில்லை. சிறுமி அந்த வாலிபருடன் காதல் உறவில் இருந்ததாக அவர் அளித்த வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது. மருத்துவ அறிக்கையும் பாலியல் பலாத்காரம் செய்ததை உறுதிப்படுத்துகிறது, ஆனால் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் என்ன முடிவு எடுக்க வேண்டுமென்பது விசாரணை நீதிமன்றத்தில் கூறியது.
எனில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் துஸ்பிரயோகத்தில் இருந்து பாதுகாப்பதை போக்சோ சட்டத்தின் நோக்கமே தவிர, இளம் வயதினரிடையே உள்ள காதல் உறவுகளை குற்றமாக்குவது போக்சோ சட்டத்தின் நோக்கமல்ல. இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் உறவில் இருப்பதை குற்றமாக கருத முடியாது இதனால் அந்த வாலிபருக்கு ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.