பெங்களூரு தேவனஹள்ளியில் உற்பத்தி ஆலையை நிறுவும் பாக்ஸ் கான் நிறு வ னத் திற்கு மற்றுமொரு ஆலையை நிறுவ தும்கூரில் 100 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி கொடுத்துள்ளது கர்நாடக அரசு.
சீனாவில் இருந்த தங்களது ஆலையை மூடிய பாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் ஐ ஃபோன் உற்பத்தி ஆலையை பெங்களூருவில் தொடங்க விரும்பியது. பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹள்ளியில் பாக்ஸ்கான் நிறுவனம் ஆலை அமைக்க பசவராஜ் பொம்மை தலைமையிலான முந்தைய பாஜக அரசு கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது.
அதன்படி 1.4 லட்சம் கோடி செலவில் தேவன்அள்ளியில் மொபைல் உற்பத்தி ஆலையை நிறுவுகிறது. இதன் மூலம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், இந்த மொபைல்களுக்குஸ்க்ரீன் மற்றும் மற்றவும் உபகரணங்கள் உற்பத்தி செய்வதற்கான மற்றொரு யூனிட்டை துமகூருவில் உள்ள ஜப்பான் இண்டஸ்டிரியல் டௌன்ஷிப்ல் அமைப்பது குறித்து பாக்ஸ்கான் நிறுவன நிர்வாகிகள் பெங்களூருவில் முதல்வர் சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்தினர்.
துமகூருவில் உள்ள ஜப்பான் இண்டஸ்டிரியல் டவுன் ஷிப் பில் 8800 கோடி செலவில் பாக்ஸ்கான் நிறுவனம் துணை ஆலையில் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதற்காக துமகூரு இண்டஸ்டிரியல் டௌன்ஷிப்ல் 100 ஏக்கர் நிலம் அந்த நிறுவனத்திற்கு கர்நாடக அரசு ஒதுக்கி கொடுத்துள்ளது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் முதல்வர் சித்த ராமையாவுடன் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தொழில் முனைவோர்களை கவரும் வகையில் கர்நாடக அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது