WorldClassHealthcare

 தமிழகத்தில் குறைந்த செலவில் மருத்துவ சேவைகள் அனைவரையும் சென்றடையும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் | ஸ்டாலின் இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. வாழ்க்கைக்கான போட்டியில் வெற்றி பெற கடுமையாக உழைப்பில் காட்டும் கவனம் உணவு பழக்க வழக்கங்களில் கடைப்பிடிப்பதில்லை.இத்தகைய சூழலில் ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் தமிழக அரசு மருத்துவ ஆரோக்கிய சுற்றுலா எனும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார். 2023,24 ஆம் ஆண்டுக்கான,மானிய கோரிக்கையில் மருத்துவத்திற்கு என பல்வேறு திட்டங்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொண்டு வந்தார்.மருத்துவ துறையில் ஆர்வமுடன் துணை செய்ய திகழும் தனியார் மற்றும் தொழில் முனைவோரு்டன் இணைந்து இந்த திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தார்.இந்த மாநாடு உடல் நலம் பேணும் பொதுமக்களை ஒருங்கிணைக்கும் வகையில்  கண்காட்சி, கருத்தரங்கம், கலந்துரையாடல் ஆகியவற்றின் மூலம் கொண்டு செய்ய முக்கிய காரணியாக விளங்கும். குறைந்த செலவில் மருத்துவ சேவைகள்  தமிழகத்தில் குறைந்த செலவில் மருத்துவ சேவைகள் அனைவரையும் சென்றடையும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். மேலும்திறமையான சுகாதார  நிபுணர்கள், சிறந்த மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் நியாய விலையில் மருந்துகள் அளிப்பதன் மூலம் பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என நம்புவதாகவும் தெரிவித்தார். தமிழக சுற்றுலா துறையும் இணைப்பு இந்த திட்டத்தை பொதுமக்களிடம் விரைவாக கொண்டு செல்லும் வகையில் தமிழக சுற்றுலா துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையும்  இணைந்து செயல்பட உள்ளது.  தமிழகத்தை மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் மாநிலமாக மாற்றும் முயற்சியில் சுணக்கம் இல்லாமல் செயல்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார்..  பிற நாடுகளின் பிரதிநிதிகள் வருகை  இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பங்களாதேஷ், ஓமன், நேபாளம், சவுதி அரேபியா, மியன்மார், ஶ்ரீலங்கா, மொரீசியஸ், வியட்நாம் மற்றும் அரேபிய நாடுகளை சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.மேலும் தமிழ்நாட்டில் உள்ள 120 க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகள், பிரபல மருத்துவர்கள், பிற நாட்டின் தூதுவர்கள், சித்தா, ஆயுர்வேத மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram