சென்னை: நடிகை விஜயலட்சுமி குடும்பம் நடத்தி 7 முறை கருச்சிதைவு செய்த விவகாரம் தொடர்பாக தனது புகாரை வாபஸ் பெற்ற நிலையில், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேற்று இயக்குநர் சீமான் நேரில் ஆஜராகி ஒரு மணி நேரம் விளக்கம் அளித்தார். அப்போது காவல் நிலையம் முன்பு குவிந்து இருந்த நாம் தமிழர் கட்சியினர் திடீரென போலீசாரிடம் வாக்குவாதம் செய்து தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்றதால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. நடிகை விஜயலட்சுமி இயக்குநர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டதால், 7 முறை கருவுற்றேன் என்றும், அதன் பிறகு தன்னை ஏமாற்றிவிட்டு கயல்விழியை திருமணம் செய்து கொண்டார். 

அதுபற்றி கடந்த 2011ம் ஆண்டே புகார் அளித்ததன் மீது, வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் சீமான் மீது கற்பழிப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அப்போது அதிமுக ஆட்சி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையே இயக்குநர் சீமான், தனது கட்சியின் முக்கிய நிர்வாகியான மதுரை செல்வம் மூலம் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி சில மாதங்கள் ரூ.50 ஆயிரம் பணம் அனுப்பியதாகவும், அதற்கு பிறகு பணம் அனுப்பவில்லை. இதுகுறித்து கேட்ட போது, மதுரை செல்வம் என்பவர் மூலம் சீமான் ஆபாச வீடியோ அனுப்பி சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவதாக மிரட்டி வருவதாக கடந்த மாதம் 28ம் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். 

புகாரின்படி, நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பிறகு 164 சட்டப்பிரிவின்படி நடிகை விஜயலட்சுமியை திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி பவித்ரா முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நடிகை விஜயலட்சுமி 3 மணி நேரம் தான் சீமானுடன் வாழ்ந்ததற்கான ஆவணங்களை சமர்ப்பித்து வாக்குமூலம் அளித்தார். அதைதொடர்ந்து இயக்குநர் சீமானுக்கு வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விளக்கம் கேட்டு கடந்த 9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர். அப்போது வழக்கு ஒன்றில் ஆஜராக உள்ளதால் கடந்த 12ம் தேதி நேரில் ஆஜராகுவதாக சீமான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

ஆனால் சீமான் கடந்த 12ம் தேதியும் ஆஜராகாமல், அவருக்கு பதில் அவரது வழக்கறிஞர் சங்கர் விசாரணை அதிகாரி ராஜலட்சுமி முன்பு ஆஜராகி சீமான் வராதது குறித்து விளக்கம் அளித்திருந்தார். பிறகு இயக்குநர் சீமான் நேரில் ஆஜராகாததால் வழக்கு தொடர்பாக போலீசார் சட்ட நிபுணர்களுடன் நடத்திய ஆலோசனையை தொடர்ந்து கடந்த 14ம் தேதி மீண்டும் 2வது முறையாக இயக்குநர் சீமான் கடந்த 15ம் தேதி காலை 10 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீலாங்கரை சந்தீப் அவென்யூ பகுதியில் வசித்து வரும் இயக்குநர் சீமானிடம் நேரில் சம்மன் வழங்கப்பட்டது. 

பிறகு ஏற்கனவே திட்டமிட்ட கட்சி பணிகள் இருப்பதால் 15ம் தேதி நேரில் ஆஜராக முடியாது என்றும், எனவே, வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் ஆஜராவதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே திடீர் திருப்பமாக இயக்குநர் சீமான் மீது கொடுத்த புகாரை நடிகை விஜயலட்சுமி கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவசர அவசரமாக வளசவராக்கம் காவல் நிலையத்தில் திரும்ப பெறுவதாக மனு அளித்தார். இந்நிலையில், ஏற்கனவே வளசரவாக்கம் போலீசார் 2 முறை அளித்த சம்மன்படி நேற்று காலை 11 மணிக்கு சீமான் தனது மனைவி கயல்விழியுடன் நேரில் ஆஜரானார். 

சீமான் காவல் நிலையம் வருவதால் அவரது கட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் காவல் நிலையம் அமைந்துள்ள ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலையில் கட்சி கொடிகளுடன் குவிந்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு சீமான் அவரது மனைவியுடன் வந்தார். அப்போது கூடியிருந்த நாம் தமிழர்கட்சியினர் கோஷம் எழுப்பியபடி சீமானுடன் காவல்நியைத்தை நோக்கி முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. அப்போது உதவி கமிஷனர் கவுதம் தலைமையிலான போலீசார் தடுப்புகள் அமைத்து நாம் தமிழர் கட்சி தொண்டர்களை சிறிது தொலைவிலேயே தடுத்து நிறுத்தினர். 

இதனால் போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அங்கு பற்றமான நிலை ஏற்பட்டதால், போலீசார் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் கடைகள் மூடப்பட்டது. பதற்றமான நிலைமையை உணர்ந்த சீமான் தனது ெதாண்டர்களை கட்டுப்படுத்தினர். அதைதொடர்ந்து தனது மனைவியுடன் சீமான், கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள், உதவி கமிஷனர் கவுதம் மற்றும் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். 

அப்போது, சீமானிடம், நடிகை விஜயலட்சமியை நீங்கள் திருமணம் செய்தீர்களா, உங்களால் 7 முறை கருவுற்றது உண்மையா? ரூ.60 லட்சம் பணம் மற்றும் நகைகள் நீங்கள் வாங்கினீர்களா? மதுரை செல்வம் மூலம் ஆபாச வீடியோ காட்டி மிரட்டினீர்களா என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு சீமான் அளித்த பதிலை போலீசார் பதிவு செய்து கொண்டனர். பின்னர் ஒரு மணி நேரம் விசாரணைக்கு பிறகு சீமான் தனது மனைவியுடன் கட்சி தொண்டர்களுக்கு கை அசைத்துவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் நேற்று காலை சிறிது நேரம் வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே பதற்றம், பரபரப்பு நிலவியது. சீமானிடம், நடிகை விஜயலட்சமியை நீங்கள் திருமணம் செய்தீர்களா, உங்களால் 7 முறை கருவுற்றது உண்மையா, ரூ.60 லட்சம் பணம் மற்றும் நகைகள் நீங்கள் வாங்கினீர்களா, மதுரை செல்வம் மூலம் ஆபாச வீடியோ காட்டி மிரட்டினீர்களா என பல்வேறு கேள்விகள் கேட்டு, அவரது பதிலை போலீசார் பதிவு ெசய்து கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram