MTS, Security Assistant / Motor Transport ஆகிய பணிகளுக்கென புலனாய்வுப் பணியகத்தில் (IB) காலிப் பணியிடங்களை குறித்து அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு மொத்தமாக 667 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்க பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள், online மூலமாக இணையவழி வாயிலாக பெறப்பட உள்ளது. இத்தகைய பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிறுவனம் | புலனாய்வுப் பணியகம் (Intelligence Bureau) |
பணியின் பெயர் | MTS, Security Assistant / Motor Transport |
பணியிடங்கள் | 677 |
கடைசி தேதி | 13.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
புலனாய்வுப் பணியிடங்கள் குறித்த விவரம்:
MTS – 315
Security Assistant / Motor Transport – 362
MTS / SA / MT கல்வி தகுதி:
இந்த வகை பணிகளை குறித்த விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருப்பது போதுமானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் Security Assistant / Motor Transport பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியமானது ஆகும்.
வயது வரம்பு:
Security Assistant / Motor Transport பணிக்கு அதிகபட்சம் 27 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
MTS பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 – 25 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
MTS / SA / MT ஊதியம்:
MTS பணிக்கு ரூ.18,000/- முதல் ரூ.56,900/- என்றும்,
Security Assistant / Motor Transport பணிக்கு ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
புலனாய்வுப் பணியகம் தேர்வு செய்யும் முறை:
Tier I – Online Written Exam
Tier II – Motor Mechanism cum Driving Test & Interview
Tier III – Descriptive Test
MTS / SA / MT விண்ணப்ப கட்டணம்:
General (Male) / EWS / OBC – ரூ.500/-
மற்ற நபர்கள் – ரூ.50/-
விண்ணப்பிக்கும் முறை:
இந்த புலனாய்வுப் பணியக பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே 14.10.2023 அன்று முதல் 13.11.2023 அன்று வரை https://www.mha.gov.in/ அல்லது https://www.ncs.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.