பொறியியல் மாணவர் தற்கொலை எதிரொலி: கடன் செயலி ஏஜெண்டுகள் மிரட்டினான் உடனே புகார் அளியுங்கள் காவல்துறை வேண்டுகோள்.
கடன் வழங்கும் செயலிகளில் இளைஞர்கள் குறி வைப்பதாகவும் அந்த செயலிகளின் மூலம் கடன் பெறுபவர்கள் மிரட்டப்படுவதாகவும் அதனால் எச்சரிக்கையாக இருக்கும் படியாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்
கடன் வழங்கும் மொபைல் செயலிகள் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரசித்த பெற்ற ஒன்று, கடன் கொடுத்துவிட்டு பின்னர் கடனை திரும்ப பெறும் ஏஜெண்ட்களை வைத்து மிரட்டுகின்றன போன்ற புகார்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. இவர்கள் மிரட்டல் காரணமாக பொறியியல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூருவை சேர்ந்த பொறியியல் மாணவர் கடன் செயலியின் மூலமாக பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாமல் இருந்துவந்த நிலையில், கடனை திரும்ப வசூலிக்கும் ஏஜென்ட்டுகள் கொடுத்த மிரட்டலின் பேரில் இதைப் பற்றி வெளியில் சொல்ல முடியாமல், வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
பெங்களூருவில் மாத்திரம் இது இது குறித்த புகார்கள் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் ஃப் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் எதிரொலியாக தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கடன் வழங்கும் 350 செயலிகளை கூகுள் பிளேஸ்டோரிலிருந்து ஒன்றிய அரசு நீக்கியுள்ளது. இது மாதிரி என்ன சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய அரசு திட்டவட்டமாக கேட்டுக்கொண்டுள்ளது. குறைந்த வட்டி விகிதத்தில் இது போன்ற செயலிகள் கடனை வழங்குவதால் இளைஞர்கள் அதற்கு அதிகம் ஆர்வம் காட்டுவது அதன் மூலமா கடன் பெற்ற பிறகு கடனை கட்ட முடியாமல் தவிப்பதும் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது
இது போன்ற கடன் செயலிகளை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும், மேலும் கடனை வசூல் செய்யும் ஏஜென்ட் கள் உங்களை மிரட்டும் பட்சத்தில் எந்த ஒரு தயக்கமும் இன்றி காவல்துறையில் நீங்கள் புகார் அளிக்கலாம். கடந்த 2022 ஆண்டு 3500 கடன் செயலிகளை பிளே ஸ்டோர் விதிகளை மீறியவை என்று கூறி பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியது கூகுள்.
கடனை திரும்ப கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் வாழ்க்கை திரும்பவும் கிடைக்கப்போவதில்லை, அவர்களுடைய பெற்றோரின் கனவுகள், தன் மகனை குறித்து அவர்கள் வைத்திருந்த ஆசைகள் எல்லாம் இன்று மண்ணோடு மண்ணாய் போனது, ஃப் மாணவர்களும் இளைஞர்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக தனது பெற்றோர்களையும் தனது குடும்பத்தையும் மனதில் ஒருமுறை நினைத்து பார்க்க வேண்டும்.
தனிநபர்கள் பயன்படுத்தும் செயலிகளைப் பற்றிய போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும், குறைந்த வட்டி வருகிறது என்ற காரணத்தால் அதை குறித்து போதுமான ஆராய்ச்சி செய்யாமல் கண்மூடித்தனமாக நம்பி கடன் வாங்கி பின்பு ஏமாறுவதையும், கடன் வசூலில் ஏஜென்ட்கள் கொடுக்கும் தொல்லைகளை தவிர்க்கவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.