திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் மீண்டும் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர், திருமலை திருப்பதி மலைப்பாதை சாலையில் சிறுத்தைகள் அங்க அங்க தென்படுவதும் மக்களை தாக்குவதுமாக இருந்து வருவது வழக்கமான ஒன்றாகும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நூல் மாவட்டம் தோனியை சேர்ந்த குடும்பத்தினர் மற்றும் அவரது மூன்று வயது மகன் உள்பட குடும்பமாக பாதயாத்திரை சென்றனர்.
அப்போது பிரசன்னா ஆஞ்சநேய சுவாமி கோவில் அருகே செல்லும்போது வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை கௌசிக்கின் கழுத்தை பிடித்து கவி கொண்டு இழுத்துச் சென்றது. உடனடியாக அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் சிறுத்தையை கற்கள் வீசியும் டார்ச் லைட் அடித்து துரத்தி சென்றதால் அந்த சிறுத்தை சிறுவனை வனப்பகுதியில் விட்டு சென்றது.
உடனடியாக சிறுவன் கௌஷிக்கை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்டது. இதனையடுத்து வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சித்து, அந்த சிறுத்தையை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். ஒரு வழியாக சிறுத்தையின் நடமாட்டம் இனிமேல் இருக்காது என்று நம்பப்பட்டு வந்த வேளையில் நேற்று மீண்டும் மலைப்பாதையில் ஐம்பத்தி யாராவது வளைவில் சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
இதனையடுத்து சோதனை சாவடி வழியாக திருப்பதி செல்லும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்து வாகனங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கையை பார்த்து கொள்ளும்படியாகவும், கண்ணாடிகளை கீழே இறக்காமல்ம் செல்லும்படி உத்தரவிட்டனர். பைக்கில் செல்லும் நபர்களை தனியாக செல்லாமல் கூட்டமாக செல்லும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் பக்தர்களிடையே பெரும் அச்சமும் பயமும் நிலவி வருகிறது, இதனால் மலைக்கு செல்லும் பக்தர்கள் அதிகாரிகளிடத்தில் இது போன்ற சம்பவங்களுக்கு எப்படியாவது ஒரு நல்ல தீர்வை காண வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர், பாத யாத்திரையாக சென்று சிறுவனை சிறுத்தை கடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது