இந்த நவீன யுகத்தில் ஒவ்வொருவரும் வங்கி கணக்கு வைத்து, அதனை முறையாக பராமரிக்கிறீர்கள். தொலைவில் இருப்பவர்களுக்கு பணத்தை அனுப்பவும், அவர்களிடம் இருந்து பணத்தை பெறவும் வங்கி கணக்குகள் சாமனிய மக்களுக்கும் மிக அத்தியாவிசயாகிவிட்டது. குறிப்பாக, தற்போதெல்லாம் சாலையோர கடைகளில் கூட UPI பரிவர்த்தனை தேவை இருப்பதால், அந்த கடைக்காரர்களும் வங்கி கணக்கை வைத்து, அதில் பண பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். பாமரர்களை பொறுத்தவரை, வங்கி என்பது இன்னும் முழுமையாக புரியாத புதிராக இருந்தாலும், ஏடிஎம் மிஷின்கள், மொபைல் எஸ்எம்எஸ்கள் போன்ற சில சேவைகள் அவர்களின் சிரமத்தை குறைக்கின்றன.

மேலும், பொதுத்துறை வங்கிகளில் மட்டுமின்றி தனியார் வங்கிகளிலும் தற்போது பலரும் கணக்கு வைத்திருக்கிறார்கள். சேமிப்புகான வட்டி, மாதாந்திர/வருடாந்திர டெபாசிட்டுக்கான வட்டி, முதலீடுக்கான வட்டி என பல்வேறு சேவைகளை வங்கிகளும், தபால் அலுவலகங்களும் வழங்கிகின்றன. இவை மட்டுமின்றி, சமையல் கேஸ் சிலிண்டர் மானியம் முதல் பல சேவைகளுக்கு, அரசு அமைப்பிலும் தற்போது வங்கி கணக்கின் தேவை உள்ளது. இந்த திட்டங்களையும், சேவைகளையும் பெற ஒருவர் வங்கி கணக்கை வைத்திருப்பது அவசியமாகிறதுஅந்த வகையில், பல்வேறு பிரிவினருக்கு பயனளிக்கும் வகையில் மத்திய அரசு பல திட்டங்கள் வகுத்துள்ளது. அத்தகைய திட்டங்களில் ஒன்று, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ், உங்களிடம் ரூ. 20 மட்டுமே இருந்தால், ரூ.2 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையைப் பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ், விபத்தினால் ஏற்படும் மரணம் மற்றும் நிரந்தர முழு இயலாமை கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், நிரந்தர பாதி இயலாமை கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த திட்டம் குறித்து முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

என்ன திட்டம்?

இது ஒரு வருட விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும். இது ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத்தக்கது. இந்த திட்டம் விபத்து காரணமாக ஏற்படும் இறப்பு அல்லது ஊனத்தை (மாற்றுத்திறனை) உள்ளடக்கியது. சேமிப்பு வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருக்கும் 18-70 வயதுக்குட்பட்ட நபர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யத் தகுதியுடையவர்கள்.இந்த திட்டத்தின் கீழ், கவரேஜ் காலம் ஜூன் 1 முதல் மே 31 வரை ஆகும். புதுப்பித்தல்கள் ஆண்டுதோறும் மே 31 அல்லது அதற்கு முன் செய்யப்படுகின்றன. இதன் கீழ், உங்கள் கணக்கில் இருந்து ரூ.20 தானாகவே கழிக்கப்படும்.

பதிவு செய்வது எப்படி?

இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்வது கணக்கு வைத்திருப்பவரின் வங்கியின் கிளை அல்லது இணையதளம் மூலம் செய்யலாம். தபால் அலுவலக சேமிப்பு கணக்கைப் பொறுத்தமட்டில் தபால் அலுவலகத்திற்கு செல்வதன் மூலம் பதிவு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ், சந்தாதாரர் ஒரு முறை மட்டுமே ஆர்டர் செய்த ஆர்டரின் அடிப்படையில் வங்கிக் கணக்கில் இருந்து தானாக டெபிட் செய்து பிரீமியத்தைச் செலுத்த முடியும்.இது ஒரு காப்பீடு மட்டுமே. மருத்துவமனைகளில் ஏற்படும் செலவுகளுக்கு இந்த திட்டத்தில் பணம் செலுத்த மாட்டார்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram