சந்திராயன் 3 வின்கலம் தற்போதைய நிலையில் தன் வழக்கமான சுற்றுப்பாதையில் இருந்து உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்து உள்ளது

சந்திராயன் விண்கலம் கடந்த 14 ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 17 ஆவது நிமிடத்தில் சந்திராயன் மூன்று செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது

இந்த நீள்வட்ட சுற்றுப் பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படும். இதன் முதல் கட்டமாக 15 ஆம் தேதி சந்திராயன் மூன்று விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது, அப்போது விண்கலம் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 173 கிலோமீட்டர் தொலைவிலும் அதிகபட்சம் 41,000 எழுபத்தி 62 கிலோமீட்டர் தொலைவிலும் சுற்றுப்பாதையில் சீரான வேகத்தில் புவியை வலம் வந்தது

இந்நிலையில் இரண்டாவது முறையாக நேற்று விண்கலத்தின் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது. விண்கலம் இப்போது 41603 x 226 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் உள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்த சுற்றுப்பாதையானது நாளை மேலும் உயர்த்தப்பட்டு நாளை மதியம் 2:00 மணி – 3:00 மணி இதற்கான பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இவ்வாறு ஐந்து முறை சுற்றுப்பாதையை உயர்த்தி விண்கலம் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் உந்தி தள்ளப்படும். ஃப் அதன் பிறகு நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கும், குறிப்பிட்ட வட்டப்பாதையிலிருந்து நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23 அல்லது 24 ஆம் தேதி அன்று சாஃப்ட் லாண்டிங் முறையில் விண்கலம் தரையிறங்கும், இவ்வாறு தரையிறக்கம் செய்த பின்பு செயற்கைகோள் ஆனது நிலவின் கட்டுப்பாடுகளை கவனித்து சிக்னல் அனுப்பத் தொடங்கும்.

இந்தியாவின் இந்த சந்திராயன் விண்கலம் ஏவப்பட்டது உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது, வான்வெளி ஆராய்ச்சியின் இந்த ஒரு நிகழ்வு இந்தியாவை உலக நாடுகள் வரிசையில் தலை நிமிர்ந்து நிற்கவும் செய்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram