நீரின்றி அமையாது உலகு., இந்த வள்ளுவர் வாக்கை எவராலும் மறக்க முடியாது. பெருகிவரும் நகர மயமாதல் , மக்கள் தொகை பெருக்கம் மற்றும் தொழில்முனை வளர்ச்சி போன்ற பல்வேறு காரணங்களினால் தண்ணீர் ஆதாரம் முற்றிலும் கேள்விக்குறியானதாக மாறிவிட்டதென்றால் அது மிகையாகாது.
இவ்வளவு இக்கட்டான சமூக சூழலில் இருக்கின்ற தண்ணீரை எல்லாருக்கும் கொண்டு சேர்ப்பது என்பது சவாலான ஒன்றாகும். அப்படி பட்ட ஒரு சவாலான சூழலை எதிர்கொண்டு வரும் மக்களுக்காக விடாமுயற்சி எடுத்து தண்ணீரை பெற்று தந்த பாரதிய ஜனதா கட்சியின், திருப்பத்தூர் மாவட்ட பொதுச் செயலாளரான திரு.கு. இளையவன் MC அவர்களின் செயலை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் பெரியாங்குப்பம் ஊராட்சி 12வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கீழ்காலனி பகுதியில் போலீஸ்காரர் மாணிக்கம் வீடு முதல் பந்தல் அமைப்பாளர் வெங்கடேசன் வீடு வரை வீட்டிற்கு செல்லும் தெருவின் பகுதியில் பல பல வருடங்களாக குடிநீருக்காக பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இதனை சமூக அக்கறையோடு தலைவர் மற்றும் அதிகாரிகளின் பார்வைகளுக்கு கொண்டு சென்று கோரிக்கை மணுவாக சமர்ப்பித்துள்ளார்.
அதை பரிசீலித்த தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் என்னுடைய சொந்த முயற்சியின் மூலமாக குடிநீர் பிரச்சனையை இன்று உடனிருந்து முடித்துக் கொடுத்தேன். பொது மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அவர்களின் இன்னல்களை போக்கும் வகையில் என்னால் முடிந்த வரை மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் அதன் உண்டான தீர்வுகளை செய்து வருகிறேன் என்று மிகுந்த மகிழ்ச்சியுடனும் தன்னிறைவுடனும் தெரிவித்துள்ளார். இது என்னுடைய தனி மனித முயற்சி மட்டும் இல்லை, இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்த மக்கள் பணிகள் தொடர மக்கள் அனைவரின் சார்பாக நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.