கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை புது நத்தம் சாலையில் 2.73 ஏக்கரில் 215 கோடி மதிப்பில் சர்வதேச தரத்துடன் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு க ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97 ஆவது பிறந்தநாள் விழாவில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் 2001ம் ஆண்டு ஜூன் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார்

இதைத் தொடர்ந்து மதுரை புது நத்தம் சாலையில் ஏழு தளங்களுடன் கூடிய  அதி நவீன வசதிகளுடன் 215 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகவும் நுணுக்கமாகவும் அதி நவீன வசதிகளுடனும் மிகுந்த கலைநயத்துடனும் அனைவரும் வியக்கும் வகையில் கலைஞரின் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது

இதன் கட்டுமான பணிகளை 2022 ஃப் ஆம் ஆண்டு காணொளி மூலம் முதல்வர் முக ஸ்டாலின் துவங்கி வைத்தார். சுமார் ஒன்றரை ஆண்டுகளில் இந்த நூலகம் சர்வதேச தரத்துடன் கட்டி முடிக்கப்பட்டது. பெருமைமிகு இந்த கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு விழா நேற்று மாலை 5:00 மணி க்கு நடந்தது.

இந்த நூலகத்தை திறந்து வைக்க வந்த முதல்வர் முக ஸ்டாலின் நூலக நுழைவு வாயில் முன்பாக நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

பின்னர் நூலகத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் டிஜிட்டல் தரையிலும் நடந்து பார்த்தார்.

கலைஞருடன் பேசிய முதல்வர்: நூலக முதல் தல அரங்கில் உள்ள ஒரு இருக்கையில் அமர்ந்தால் இருக்கை அருகே உள்ள டிஜிட்டல் டிவியில் கலைஞர் தோன்றி வாசகர்களுடன் பேசு வது போல அமைக்கப்பட்டுள்ளது. நேற்று நூலகம் வந்த முதல்வர் மு க ஸ்டாலின், நூலகத்தில் கலைஞருடன் பேசுவதுபோல அமைக்கப்பட்டிருந்த திரை முன்பாக இருக்கையில் அமர்ந்தார் டிவியில் கலைஞர் தோன்றி பேசும் போது முதல்வர் நிகழ்ச்சி அடைந்தார்.

வாய்ப்பு கிடைத்ததற்கு பெருமை அடைகிறேன்: முதல்வர் மு க ஸ்டாலின் நூலகத்தின் வருகைப் பதிவேட்டில், “தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு நூல் நிலையத்தை மதுரை மாநகரில் திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் பெருமைப்படுகிறேன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் அயராது உழைப்போம் வாழ்க கலைஞர்” என்ன தனது கைப்பட எழுதி அதன் கீழே கையெழுத்திட்டு தேதியையும் பதிவு செய்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram