திண்டுக்கல் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேனில் வந்த டிரைவர் அழகர்சாமி டீசலை நிரப்புமாறு கூறியுள்ளார். பணியில் இருந்தவர்கள் 60 லிட்டர் 600 மில்லி டீசல் போட்டு உள்ளதாக பணம் கேட்டனர், ஆனால் அழகர்சாமி “அய்யா வாகனத்தின் டீசல் டேங்க் கொள்ளவே மொத்தம் 60 லிட்டர் தான், நான் வேனை ஓட்டி வந்த டீசல் போட்டு உள்ளேன், எப்படியும் அதில் ஒரு டீசல் இருந்திருக்கும் அப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி 60 லிட்டருக்கு மேல் போட்டீர்கள்” என்று கேள்வி எழுப்பினார் இதனால் இரு தரப்பினருக்கும் மிகுந்த வாக்குவாதம் நீடித்தது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த வேண்ட இவர் வேனில் இருந்த டீசல் டேங்க் கலெக்டர் ஐ அழைக்க வேண்டும் என்று கூறினார்.
பங்க் இலிருந்து பணியாளர்களும் அதை செய்தனர், அப்போது அதில் 60 லிட்டர் டீசல் இருந்தது தெரிய வந்தது. ஆச்சரியமடைந்த வேன் டிரைவர், “சாதாரணமாக வாகனத்தில் குறைந்த பட்சம் ஐந்து லிட்டர் டீசல் இருக்கும், நான் வேனை ஒட்டிக்கொண்டுதான் பெட்ரோல் பங்கிற்கு வந்தேன், குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் டீசல் இல்லாவிட்டாலும் வேனை ஓட்டிக்கொண்டு வர முடியாது இப்படி இருக்கும்பொழுது 60 லிட்டர் டீசல் நீங்கள் போட்டிருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது, ஃப் இந்த சூழ்நிலையில் வாகனத்தில் இருந்த குறைந்தபட்ச டீசல் எங்கே போனது எப்படி காணாமல் போனது என்று கூறி புலம்பியுள்ளார்” வேன் டிரைவரின் இந்த புலம்பல் சமூக வலைதளங்களில் வைரலானது.