ஒருவழியாக கர்நாடக மாநில முதல்வர் பதவியை சித்தராமையா கைப்பற்றினார். கர்நாடகா.வில் திடீர் திருப்பம்: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற போது தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிஜேபி யிடம் இருந்து கைப்பற்றியது. ஆனாலும் அக்கட்சியின் முதல்வர் யார் என்ற கேள்வி தொண்டர்களிடையே ஏற்பட்டது. அதற்காக அக்கட்சியின் மாநில தலைவர் சிவக்குமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் டெல்லிக்கு காவடி தூக்கி சென்றனர். எம்.எல். ஏ.க்களிடயே மோதல் சித்தராமையா தரப்பு மற்றும் சிவக்குமார் தரப்பு என இரண்டு பிரிவாக பிரிந்து எம்.எல். ஏ.க்களிடையே மோதல் உருவானது. நிலைமை கை மீறி போவதை உணர்ந்த காங்கிரஸ் கட்சி மேலிடம் இருவரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதிலும் இருவரும் ஒருவருக்கொருவர் சமாதானம் ஆகவில்லை. பின்பு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இருவரையும் ஒத்துபோகும் படி கூறியதால் பிரச்சினை இன்று முடிவுக்கு வந்துள்ளது. சித்தராமையா முதல்வர் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு முன்னாள் முதல்வர் சித்தராமையா முதல்வராக காங்கிரஸ் கட்சியால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். துணை முதல்வராக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை மறுநாள் பதவியேற்பு விழா பெங்களூரு கண்டிவாரா மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்த கருத்துகளை உடைய கட்சிகளை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும் என காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இருவரிடமும் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்பதற்காகவே பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறினார்.
Science
Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore...
Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore...