பொது இடங்களில் அழகான பெண்களை ஆபாசமாக படம் எடுத்துட்டு டெலகிராம் குழுவில் விற்று வந்த பி டெக் பட்டதாரி கைது.
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவரின் புகைப்படம் அவருடைய ஆன் நண்பருக்கு மோசடி கும்பல் Telegram செயலி மூலம் அப்பெண்ணின் படத்தை விற்பனை செய்துள்ளது.
இதை பார்த்த அவரது ஆண் நண்பர் அந்த பெண்ணிடம் தவறான நோக்கத்துடன் நெருங்கியுள்ளார், இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அந்த பெண் விவரங்களைக் கேட்டு ஃப் உடனடியாக சைபர் க்ரைம் பொலிஸாரிடத்தில் புகாரளித்தார்.
அதன்படி புகார் அளித்த இளம் பெண்ணின் புகைப்படங்களை விற்பனை செய்யப்பட்டு டெலிகிராம் அமைதியை வைத்து விசாரணை நடத்திய போது ஈரோடு பகுதியில் இருந்து புகைப்படம் அனுப்பியது தெரிய வந்தது
சென்னையில் இருந்து ஈரோடு விரைந்த தனிப்படை காவல்துறையினர் ஈரோட்டில் உள்ள காவல் அதிகாரிகளுடன் இணைந்து விசாரணையை துவக்கினர்
அப்போது கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களின் புகைப்படங்களை டெலிகிராம் குழுவில் விற்பனை செய்து வந்தது ஈரோடு மாவட்ட சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ஆர்யா என தெரிய வந்தது
பி டெக் பட்டதாரியான இவர் வேலை படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். வேலை கிடைக்கும் வரை அவரது தந்தை முகேஸ்வரன் நடத்தி வரும் மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ரெண்டாயிரத்து பத்தொன்பதாம் அன்று டெலிகிராம் பக்கத்தில் ஒரு நண்பர் கிடைத்துள்ளார் வரிடம் பல அம்சமான வீடியோக்களையும் போட்டோக்களையும் கேட்டு இவர் வாங்கி அதை பார்த்துள்ளார், அப்போது தான் தெலுங்கு தமிழ் குழுவில் உள்ள நண்பர்கள் அதிக அளவில் இந்த மாதிரியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொண்ட இவர் நீங்கள் எனக்கு பணம் அனுப்பினால் நான் உங்களுக்கு இந்த மாதிரியான வீடியோக்களையும் புகைப்படங்களையும் அனுப்பி வைக்கிறேன் என்று ஒரு பெரிய குழுவைத் தொடங்கியுள்ளார்.
பணத்திற்கு ஆசைப்பட்ட ஆர்யா ஈரோடு சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் கோவை ஊட்டி என பல சுற்றுலா இடங்களுக்கு சென்று அங்க உள்ள இளம் பெண்களையும் இளம் காதல் ஜோடிகளையும் அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்துள்ளார்.
அதேபோல பேருந்துகளில் சைக்கிள் ஸ்கூட்டர்களில் வரும் கல்லூரி மாணவிகளை புகைப்படம் எடுத்துள்ளார், இந்த படங்களையெல்லாம் டெலிகிராம் குழுவில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து விட்டு அதற்கான பணத்தையும் பெற்று வந்துள்ளார்.
அந்த வகையில்தான் புகார் அளித்த பெண் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் கடந்த ஆண்டு ஒரு வேளச்சேரியில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்திற்கு துணி எடுக்க தனது தோழியுடன் வந்தபோது அவருக்கு தெரியாமல், ஆபாசமாக அவரை புகைப்படம் எடுத்தது தெரிய வந்தது. இந்த Telegram குழுவில் நாடு முழுவதிலும் இருந்து ஆபாச புகைப்படம் வாங்குவோர் இருப்பது தெரிய வந்தது அதைத்தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்ட பி டெக் பட்டதாரியான ஆர்யாவை சைபர்கிரைம் போலீசார் ஈரோட்டில் கடந்த 13 ஆம் தேதி கைது செய்தனர்.
அவரிடமிருந்து ஒரு லேப்டாப் செல்ஃபோன் புகைப்படம் எடுத்து பயன்படுத்தப்பட்டு கேமரா, வங்கிக் கணக்குகள் மற்றும் இளம் பெண்களின் புகைப்படங்கள் போன்றவற்றைப் பறிமுதல் செய்தனர்