வந்தே பாரத் ரயில் சேவை என்பது இந்திய நகரங்களுக்கு இடையே உள்ள அதிகமான  இடைவெளியை குறைத்து அதிவேகமாக செல்லக்கூடிய பணி ஆகும். பிரதமர் மோடி அறிவித்த மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழான முன்னெடுப்பில் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் ஒன்றரை ஆண்டு கால உழைப்பின் பலனால் உருவானது. சகாப்தி விரைவு ரயிலின் புதிய வடிவமே இந்த வந்தே பாரத் ரயில் சேவை.. 2019.ம் ஆண்டு  பிப்ரவரி 15.ல் இந்த சேவை துவங்கப்பட்டது..ஏறக்குறைய 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயிலில் குளிர்சாதன வசதி மற்றும் எக்சிக்யூடிவ் ஆகியன உள்ளன.

முதல் பயணம்

முதல் பயணம் 2019.ம் ஆண்டு பிப்ரவரி 15.ம் நாள் தொடங்கியது. தலைநகர் டில்லியிலிருந்து வாரனாசிக்கான சோதனை ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.முதல் நாள் சோதனை ஓட்டத்தின் போது, வாரணாசியிலிருந்து திரும்பிய போது நடுவழியில் பழுதானது. பின்னர் பழுது சரிசெய்யப்பட்டு  டில்லியை வந்தடைந்தது. 2019 பிப்ரவரி 17.ம் நாள் அன்று வர்த்தக ரீதியான தனது முதல் பயணத்தை வந்தே பாரத் சேவை தொடங்கியது.

தமிழ்நாட்டில் வந்தே பாரத்

சமீபத்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை – கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.இந்த ரயில் மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை – கோவை இடையே பயணிகள் அதிக அளவில் பயணிக்கும் நிலையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் வரிசையாக இந்த மாதம் முழுக்க பல சீட்களுக்கு புக் செய்யப்பட்டு உள்ளது.அந்த அளவிற்கு மக்கள் இந்த ரயிலில் செல்ல தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நன்மை, தீமைகள் என்ன?

##. இந்த ரயிலில் எந்த விதமான சலுகை கட்டணமும் கிடையாது. குழந்தைகளுக்கு குறைந்த கட்டணம் கிடையாது. வயது வந்தோருக்கான முழு கட்டண டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.

##. இந்த ரயிலில் மூத்த குடிமக்கள், பத்திரிகையாளர் சலுகை டிக்கெட் முன்பதிவு கிடையாது.

## வந்தே பாரத் ரயில்களுக்கான முன்பதிவு, ரத்துசெய்தல் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் ஆகிய விதி முறைகள் சதாப்தி ரயில்களுக்கான விதிகளை போலவே இருக்கும்.

## முன்பதிவு செய்யும் கேட்டரிங் சேவைகளை தேர்வு செய்ய முடியும்.

 ## முன் கூட்டியே கேட்டரிங் சேவையைத் தேர்வு செய்யாத ஒரு பயணி, பின்னர் அதே வந்தே பாரத் ரயிலில் உணவை வாங்க முடிவு செய்தால், சாதாரண கேட்டரிங் கட்டணங்களுடன் கூடுதலாக ரூ.50/- கட்டணம் செலுத்தி உணவு பெறலாம்.

##. பொது மற்றும் தட்கல் கோட்டாவைத் தவிர வேறு எந்த கோட்டா இல்லை.

##. . எம்.பி.க்கள், எம்.எல்.ஏ கூப்பன்கள், பிற கூப்பன்கள், ராணுவ/பாராமிலிட்டரி வாரண்ட்கள் போன்றவற்றின் பாஸ்கள், ரயில்வே துறைக்கு முழுமையாக திருப்பிச் செலுத்தக்கூடிய கட்டணத்துடன் கூடிய பாஸ்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

##. வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் காலை உணவுக்கான விலை ரூ. 205. பிற்பகல் உணவு ரூ. 205. மாலை நேர சிற்றுண்டி ரூ. 155. இரவு நேர உணவு ரூ 294. இதன் மேல் ஜிஎஸ்டி கட்டணம் விதிக்கப்படும்.

## இந்த ரயிலில் மொத்தமாக பல்க் முன்பதிவு செய்ய முடியும்.

##. ரயில்வே ஊழியர்களுக்கான பாஸ்களில் பிரத்தியேகமாக டிக்கெட் முன்பதிவு அனுமதிக்கப்படுகிறது.

##. ரயிலில் ஊழியர்களுக்கான பாஸ் தவிர மற்ற ரயில்வே தொடர்பான பாஸ்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இதுபோன்ற சில கட்டுப்பாடுகள் இனிவரும் காலங்களில் களையப்பட்டு, குறைந்த பயண கட்டணங்களில் பொதுமக்கள் அனைவரும் பயணிக்க உதவ ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram